அதிகாரிகள் ஆய்வு


அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2021 8:24 PM IST (Updated: 29 May 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூருக்கு தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் 
திருப்பூருக்கு தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
முதல்-அமைச்சர் வருகை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகியவற்றிற்கு சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தர இருக்கிறார். இதையட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது. சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவ சேவை மையத்தை தொடங்கிவைக்கிறார். இதுபோல் சென்னையில் ஏற்கனவே அமலில் இருக்கும் இனோவா கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை திருப்பூரில் 20 எண்ணிக்கையில் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடப்படுகிற விதம் குறித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் கேட்க இருக்கிறார்.
இதற்கிடையே நேற்று மாலை திருப்பூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சமயமூர்த்தி, திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவ சேவை மையத்தை ஆய்வு செய்தனர்.
-----


Next Story