காதலுக்கு எதிர்ப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை - போலீசார் விசாரணை


காதலுக்கு எதிர்ப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 May 2021 8:28 PM IST (Updated: 29 May 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்,

நெல்லை மாவட்டம் இடையன்குடி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 20). இவர், தஞ்சை-திருச்சி சாலையில் நடந்து வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகளில் ஓப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக ஆச்சாம்பட்டி பகுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் வினோத், அவரது ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனால் மனமுடைந்த வினோத் நேற்று முன்தினம் ஆச்சாம்பட்டியில் தான் தங்கி இருந்த பகுதி அருகே உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் இதுகுறித்து உடனடியாக செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story