சமூக இடைவெளியின்றி குவிந்த வியாபாரிகள்


சமூக இடைவெளியின்றி குவிந்த வியாபாரிகள்
x
தினத்தந்தி 29 May 2021 8:37 PM IST (Updated: 29 May 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் கமிஷன் மண்டிகளில் நடைபெறும் காய்கறிகள் ஏலத்தின் போது, வியாபாரிகள் கூட்ட நெரிசலால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

உடுமலை
உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் கமிஷன் மண்டிகளில் நடைபெறும் காய்கறிகள் ஏலத்தின் போது, வியாபாரிகள் கூட்ட நெரிசலால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
காய்கறி கமிஷன் மண்டி
 உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி கமிஷன் மண்டிகள் தற்போது தற்காலிகமாக வாரச்சந்தை வளாகத்தின் தெற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த 26ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 
இங்கு சரக்கு வாகனங்கள் வந்து செல்வது, கடந்த 3 நாட்களை விட நேற்று அதிகமாக இருந்தது. நேற்று அதிகாலை விவசாயிகள் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றில் காய்கறிகளை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வந்திருந்தனர். 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
காற்றில் பறந்தது சமூக இடைவெளி
நேற்று காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்தது. இந்த காய்கறிகள் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் ஏராளமானவியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரி காய்கறிகளை ஏலத்தில் எடுத்தனர்.அப்போது இந்த பகுதியில் காய்கறிகளை கொண்டு வந்திருந்த விவசாயிகள், ஏலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், காய்கறிகளை ஏற்றி, இறக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் என கூட்டம் அதிகமாக இருந்தது. ஏலத்தின் போது அந்த காய்கறிகளின் தரத்தை பார்த்து, அதற்கு ஏற்ப ஏலத்தொகையை கூறுவதற்காக அந்த இடத்தில் வியாபாரிகள் கூட்டமாக நெருக்கி கொண்டு நின்றிருந்தனர்.
அதனால் இந்த கமிஷன் மண்டிகள் செயல்படும் இடத்தில், அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள் கடைபிடிக்கபடாத வகையில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.அதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அனுமதி இல்லை
அந்த பகுதியில் ஏலம் நடந்து கொண்டிருந்த போது, அங்கு அடுத்தடுத்து வாகனங்களில் காய்கறிகள் வந்து கொண்டிருந்தது. அதனால் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்த காய்கறிகளை ஏற்றிச்செல்வதற்கு வந்த சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

Next Story