கொரோனாவுக்கு பலியான முதியவர் உடலை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்


கொரோனாவுக்கு பலியான முதியவர் உடலை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்
x
தினத்தந்தி 29 May 2021 8:46 PM IST (Updated: 29 May 2021 8:46 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் கொரோனாவுக்கு பலியான முதியவர் உடலை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்தனர்.

குலசேகரன்பட்டினம், மே:
உடன்குடி பரதர் தெருவை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து அவரது உறவினர்கள் த.மு.மு.க.வினரிடம் அவர்களது மத வழக்கப்படி நல்லடக்கம் செய்ய வேண்டுமென கூறினர். இதனையடுத்து அரசு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, த.மு.மு.க. மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஜோதிநூர் ஆலோசனையில் உடன்குடி நிர்வாகிகள் இத்ரீஸ், ஆசாத், சுஹைல், தினேஷ், மகாராஜா, மாவட்ட ஊடக அணி செயலாளர் முகம்மது ஆபித் ஆகியோர் தக்க பாதுகாப்புடன் முதியவரின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Next Story