கொரோனா வார்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
கொரோனா வார்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள கொரோனா படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுகிறது. தற்போது கொரோனா 2வது அலையில் ஆக்சிஜன் படுக்கைகள் பெரும்பாலானவர்களுக்கு தேவைப்படுவதால் பலரும் அங்கும், இங்குமாக சுற்றித்திரிகிறார்கள்.இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள குமரன் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கொரோனா படுக்கைகளுக்கு கட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story