கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் காத்திருக்கும் அவலம்


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் காத்திருக்கும் அவலம்
x
தினத்தந்தி 29 May 2021 9:45 PM IST (Updated: 29 May 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து வருகின்றனர். இவ்வாறு இறந்தவர்களின் உடல்கள் அதிகஅளவில் சுடுகாட்டிற்கு கொண்டு வருவதால் எரிப்பதில் தாமதம் ஏற்பட்டு உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்படுகிறது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து வருகின்றனர். இவ்வாறு இறந்தவர்களின் உடல்கள் அதிகஅளவில் சுடுகாட்டிற்கு கொண்டு வருவதால் எரிப்பதில் தாமதம் ஏற்பட்டு உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்படுகிறது.
நோய் தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விட கொரோனா அறிகுறியுடன் வந்து சிகிச்சை பெறுபவர்கள் அதிகஅளவில் பலியாகி வருகின்றனர். இவ்வாறு நாள்தோறும் ராமநாதபுரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிகிச்சை பலனின்றி இறந்த பிறகு ராமநாதபுரம் அருகே உள்ள அல்லிக்கண்மாய் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
காத்திருப்பு
 நாள்தோறும் ஏராளமானோர் பலியாகி வருவதால் இந்த மின்மயானத்தில் காலை முதல் இரவு வரை இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர். அதிக அளவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்படுவதால் இவர்களை முறைப்படி எரியூட்டும் பணி மேற்கொள்வதாகவும் சில நேரங்களில் எந்திரக் கோளாறு போன்றவற்றால் தாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
கொரோனா நோயாளிகள் அதிக அளவில் எரிக்கப்படு வதால் இயற்கையாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வருபவர்கள் தங்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
கோரிக்கை 
எனவே ராமநாதபுரம் நகரின் அவசிய தேவை கருதி அல்லிக்கண்மாய் சுடுகாட்டு பகுதியில் மேலும் ஒரு எரிவாயு மின் தகனமேடை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story