1170 பேருக்கு கொரோனா தடுப்பூசி


1170 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 May 2021 9:55 PM IST (Updated: 29 May 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

1170 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தாராபுரம்
 தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அலங்கியம், பொன்னாபுரம், தளவாய் பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு  கொரோனா தடுப்பு ஊசி முகாம் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த  முகாமில் 1170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமினை வட்டார மருத்துவர் தேன்மொழி பார்வையிட்டார்.

Next Story