கொரோனா தப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது


கொரோனா தப்பூசி செலுத்தியவர்கள்  எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 29 May 2021 10:12 PM IST (Updated: 29 May 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தப்பூசி போட்ட வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது.
நோய்தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம் தொற்று அதிகமாகி வருவதோடு மறுபுறம் நோய்த்தொற்றால் சிகிச்சை பலனின்றி பலர் பலியாகி வருகின்றனர்.  கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் இருத்தல், கைகழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினாலும் கொரோனா தடுப்பூசி போடுவதுதான் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்கு வழியாகும். 
ஏனெனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் மரணம் வரை செல்வதில்லை. உரிய சிகிச்சையில் குணமடைந்து வீடுதிரும்பி விடுகின்றனர் என்பது நிரூபணமாகி உள்ளது. ஆரம்பத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்கள் பலர் ஆர்வம் காட்டவில்லை. 
முன்வரவில்லை
அச்சம் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற இதர காரணங்களினால் ஊசி போட்டுக்கொள்ள முன்வர வில்லை. தற்போது தொற்று வேகமாக பரவி வருவதாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரிய வருவதாலும் மாவட்ட நிர்வாகம் சுகா தாரத்துறை மூலம் கிராமங்கள் தோறும் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாகவும் அதிகஅளவில் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். 
இன்னும் சொல்லப்போனால் அதிகம்பேர் பலியாகி வருவதால் மக்களிடையே தற்போது உயிர் அச்சம் ஏற்பட்டு தடுப்பூசி போட வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர்.
இதன்காரணமாக நாள்தோறும் இதுவரை 500 முதல் 800 வரை இருந்த தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை தற்போது நாள்தோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை உள்ளது.
தடுப்பூசி
 அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 27-ந் தேதி வரை 99 ஆயிரத்து 29 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 4 ஆயிரத்து 695 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர் களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது. 
இவர்களில் அரசு ஆஸ்பத்திரியில் 3 ஆயிரத்து 978 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் ஆயிரத்து 729 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியில் 13 ஆயிரத்து 68 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் ஊசி போட்டுக் கொண்ட வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாலும் அதிகம்பேர் பதிவு செய்துள்ளதாலும் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது.

Next Story