மனைவி தற்கொலை-கணவன் கைது


மனைவி தற்கொலை-கணவன் கைது
x
தினத்தந்தி 29 May 2021 10:13 PM IST (Updated: 29 May 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

ஆவூர், மே.30-
விராலிமலை தாலுகா, நீர்பழனி ஊராட்சி காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 37), கூலி தொழிலாளி. இவரது மனைவி மலர் (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று, அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த மலர் எலி மருந்தை குடித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மலரின் தந்தை முத்துக்கருப்பன் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் பழனிவேல் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story