கொரோனா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்ட மூதாட்டி- போலீசார் நிவாரண பொருட்களை வழங்கினர்
மெஞ்ஞானபுரத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்ட மூதாட்டிக்கு போலீசார் நிவாரண பொருட்களை வழங்கினர்.
மெஞ்ஞானபுரம், மே:
மெஞ்ஞானபுரம் அசரியா நகரைச் சேர்ந்தவர் சொர்ணம் (வயது 60). இவருடன் வயதான கனகராஜ் (80) மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகள் மூன்று பேர் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் உணவு மற்றும் மளிகை பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளனர். அதனால் சொர்ணம் தூத்துக்குடி கொரோனா காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தனக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் வேண்டும் என உதவி கேட்டுள்ளார். தகவலின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்மணி மற்றும் போலீசார் உடனடியாக மூதாட்டி வீட்டிற்கு சென்று உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.
Related Tags :
Next Story