308 பேருக்கு கொரோனா தொற்று
308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம்,
மாவட்டத்தில் 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 308 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 16 ஆயிரத்து 179 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 168 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 681 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 287 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 211 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
6 பேர் பலி
இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story