திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ெகாரோனாவுக்கு 10 பேர் பலியானார்கள்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ெகாரோனாவுக்கு 10 பேர் பலியானார்கள்.
40 ஆயிரத்தை தாண்டியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றின் தாக்கத்தை குறைக்க மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் பகல், இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் திருவண்ணாமலை நகரத்தில் பகல் நேரத்தில் ஓரளவிற்கு மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் அத்தியாவசிய தேவையின்றி வருபவர்களை போலீசார் விசாரணை நடத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 40 ஆயிரத்து 282 ேபர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
10 பேர் பலி
இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா பராமரிப்பு மையங்களிலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 686 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி 10 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
தற்போது 7 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 406 பேர் கொரோனாவினால் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story