புதுப்பேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை


புதுப்பேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 May 2021 10:30 PM IST (Updated: 29 May 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள உளுந்தாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் தனபால் மனைவி சம்பூர்ணம் (வயது 65). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

 தனிமையில் இருந்து வந்த சம்பூர்ணம் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி அவதியடைந்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட வந்த அவர் கடந்த 27-ந்தேதி யாருமில்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 பலத்த தீக்காயம் அடைந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நிலையில் நேற்று மாலை அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சம்பூர்ணம் பரிதாபமாக உயிரிழந்தார். 

. இதுகுறித்து அவரது தம்பி செல்வராஜ் புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story