400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 29 May 2021 10:34 PM IST (Updated: 29 May 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
சாராய ஊறல் அழிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் வைத்தி என்பவர் வீட்டின் அருகே சாராய ஊறல் போட்டு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உத்தரவின் பேரில் சீர்காழி மதுவிலக்கு மற்றும் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
அப்போது  ஓதவந்தான்குடி கிராமத்தில் சாராய ஊறல் பாடப்பட்டு  இருப்பதை கண்டு பிடித்தனர். பி்ன்னர் போலீசார் 400 லிட்டர் சாராய ஊறலை கொட்டி அழித்தனர். இதையடுத்து சாராய வியாபாரி வைத்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story