பரோலில் வந்த பேரறிவாளன், போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார்


பரோலில் வந்த பேரறிவாளன், போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார்
x
தினத்தந்தி 29 May 2021 10:37 PM IST (Updated: 29 May 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஒரு மாதம் பரோலில் ஜோலார்பேட்டைக்கு வந்த பேரறிவாளன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

ஜோலார்பேட்டை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நேற்று முன்தினம் 4 வது முறையாக ஒரு மாத பரோலில் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு பலத்த காவலுடன் வந்தார்.

 அவரது வீட்டில் சுழற்சி முறையில் ஒரு துணை ேபாலீஸ் துணை சூப்பிரண்டு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் உள்பட 27 பேர் துப்பாக்கி ஏந்தியபடி பலத்த காவலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் முதல் நாளான நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடகிருஷ்ணன் தலைமையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி மற்றும் போலீசார் பலத்த காவலுடன் பேரறிவாளனை அவரது இல்லத்தில் இருந்து கடைத்தெரு, பார்சம்பேட்டை புதூர் ஆஞ்சநேயர் கோவில், சந்தைக்கோடியூர் வழியாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு 10.30 மணியளவில் அழைத்து வந்தனர்.

அதன் பிறகு போலீஸ் நிலையத்தில் உள்ள பொது மக்கள் புகார் கொடுக்கும் விசாரணை அறையில் பேரறிவாளன் கையெழுத்திட்டார். அதன் பிறகு மீண்டும் பலத்த காவலுடன் அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றனர்.

Next Story