கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு


கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2021 10:46 PM IST (Updated: 29 May 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் கேரட் சுத்திகரிப்பு நிலையத்தை குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கேரட்டுகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு தெரிவித்த கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதுகுறித்து உதவி இயக்குனர் பெபிதா கூறும்போது, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்து பொதுமக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

அதன்படி குன்னூர் வட்டார விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த 350 கிலோ பீன்ஸ், 200 கிலோ உருளைக்கிழங்கு, 850 கிலோ கேரட் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வழங்கப்பட்டது. 

50-க்கும் மேற்பட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு காய்கறிகள் தேவை என்று தெரிவித்தனர். அந்தந்த பகுதிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் வசிப்பிடங்களுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டது என்றார்.


Next Story