500 லிட்டர் சாராயம் பறிமுதல்


500 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 May 2021 11:18 PM IST (Updated: 29 May 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது

மானாமதுரை
மானாமதுரை முத்துராமலிங்கபுரத்தில் கிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் அருகே 2 பேரல்களில் 300 லிட்டர் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் அங்கு சென்று சாராயத்தை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். 
மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையாக வைத்திருந்த பொருட்களையும் கைப்பற்றினர். கிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
மேலும் எஸ்.புதூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமையில், உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி மற்றும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் மேட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், குளத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பருத்தி காட்டில் சாராயம் காய்ச்்சி  ேபரலில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்றபோது போலீசாரை கண்ட நாகராஜ் தப்பியோடிவிட்டார். 
இதனையடுத்து 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை கைப்பற்றி பறிமுதல் ெசய்தனர். 
ேமலும் இதுகுறித்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய நாகராஜை தேடி வருகின்றனர்.

Next Story