கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள் கடத்தி வந்த 10 பேர் கைது 534 மதுபாட்டில், 5 வாகனங்கள் பறிமுதல்


கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள் கடத்தி வந்த 10 பேர் கைது 534 மதுபாட்டில், 5 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 May 2021 11:19 PM IST (Updated: 29 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 534 மதுபாட்டில்கள், மது பாக்கெட்டுகளையும், 5 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரிமங்கலம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 534 மதுபாட்டில்கள், மது பாக்கெட்டுகளையும், 5 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் மூலம் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று காரிமங்கலம் அடுத்த கும்பாஅள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள், 2 ஸ்கூட்டர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த வாகனங்களில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
10 பேர் கைது
இதையடுத்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் போலீசார் விசாரித்ததில், சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த இளங்கோவன் (வயது 30), நெத்திமேடு பகுதியை சேர்ந்த தீபக் (25), தாதகாப்பட்டியை சேர்ந்த முஸ்தாக் (28), தீபக் (19), எடப்பாடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (47), தர்மபுரி மாவட்டம் கீழ் மொரப்பூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (32), செட்டிகரை பகுதியை சேர்ந்த முரளி (30), ரவிச்சந்திரன் (29), புலிகரையைச் சேர்ந்த தாமோதரன் (25), அஜித்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்த 534 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள் கடத்தி வந்ததாக அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காரிமங்கலம் கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனையில்  கடந்த 4 நாட்களாக மதுபாட்டில்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாலக்கோடு
மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் 281 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், மாரண்டஅள்ளி அருகே உள்ள சக்கிலிநத்தம் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் (வயது 34), இவருடைய நண்பர் மாதேஷ் (36) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும், மதுபாட்டில்கள், சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story