கோவையில் 3692 பேருக்கு கொரோனா
கோவையில் 3692 பேருக்கு கொரோனா
கோவை
3,692 பேருக்கு கொரோனா உறுதியானதால், கோவை மாநில அளவில் 4-வது நாளாக முதலிடம் பெற்றுள்ளது. 20 பேர் பலியானார்கள்.
3,692 பேருக்கு தொற்று
கோவையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதில் குறிப்பாக சென்னையை விடவும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து மாநில அளவிலான பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் பிடித்து வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத் தின் அதிதீவிர நடவடிக்கை காரணமாக கோவையில் ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து உள்ளது.
மாநில சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியான கொரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் புதிதாக 3 ஆயிரத்து 692 பேருக்கு தொற்று உறுதியானது.
இதன் மூலம் கோவை மாநில அளவில் தொடர்ந்து 4-வது நாளாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
3,188 வீடு திரும்பினர்
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட் சத்து 63 ஆயிரத்து 458 ஆக அதிகரித்தது.
கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3,188 பேர் நேற்று ஒரே நாளில் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர்.
தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அதில் இருந்து குணமாகி வீடு திரும்பியவர்கள் 12 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
கோவையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 446 ஆக அதிகரித்தது. கோவையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதனால் கொரோனா உயிரிழப்பும் சற்று குறைந்து உள்ளது. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,188 ஆக உயர்ந்தது. தற்போது 38 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story