தி.மு.க.சார்பில் ஏழை,எளியோருக்கு உணவு


தி.மு.க.சார்பில் ஏழை,எளியோருக்கு உணவு
x
தினத்தந்தி 29 May 2021 11:25 PM IST (Updated: 29 May 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.சார்பில் ஏழை,எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.

கீழக்கரை, 
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் தி.மு.க. சார்பில் கீழக்கரை நகரில் முழு ஊரடங்கின் போது வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. ஊரடங்கு முடியும் வரை தினமும் மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்று இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ஹமீது சுல்தான் கூறினார். கீழக்கரை தி.மு.க. நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமையில், மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், பயாஸ், நயீம், அஸ்மத் உசேன், ஆகியோர் உணவு பொட்டலங்களை வினியோகம் செய்தனர்.

Next Story