எம்எல்ஏவுடன் திமுகவினர் வாக்குவாதம்


எம்எல்ஏவுடன் திமுகவினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 29 May 2021 11:43 PM IST (Updated: 29 May 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

எம்எல்ஏவுடன் திமுகவினர் வாக்குவாதம்

கோவை

கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில்  45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற் றது. 

அங்கு சென்ற சிங்காநல்லூர் தொகுதி கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் பிஸ்கட்களை வழங்கினர். 

அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சிலர் கே.ஆர்.ஜெயராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம், கட்சி சின்னம், கொடி போன்றவை இல்லாமல் தான் நலத்திட்டங்களை வழங்குகிறோம். ஏன் தடுக்கிறீர்கள்? என கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. கேட்டார்.

அதை ஏற்க மறுத்த தி.மு.க.வினர், தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதியில் வழங்க கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். இதை அறிந்த சிங்காநல்லூர் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர். 

இதனால் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. ஆரம்ப சுகாதார நிலையத்தின் வெளியே தடுப்பூசி போட காத்திருந்த பொது மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினார்.


Next Story