காய்கறி லாரிகளில் மதுவை கடத்தி வந்த 2 டிரைவர்கள் கைது


காய்கறி லாரிகளில் மதுவை கடத்தி வந்த 2 டிரைவர்கள் கைது
x
தினத்தந்தி 29 May 2021 11:48 PM IST (Updated: 29 May 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி லாரிகளில் மதுவை கடத்தி வந்த 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நொய்யல்
ஓசூரில் இருந்து மதுரையை நோக்கி காய்கறி ஏற்றி வரும் 2  லாரிகளில் மதுப்பாட்டில்களை பதுக்கி கடத்தி வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஓசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிகளில் உள்ள காய்கறிகளுடன் மதுப்பாட்டில்களை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளின் டிரைவர்களான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குன்னம்பட்டி கிழக்கு தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 27), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பூவந்தி மேலகாலனியை சேர்ந்த முருகன் (34) ஆகியோரை கைது செய்து, அந்த லாரிகளையும், அதில் இருந்த 62 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story