கரூர் காந்திகிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கரூர் காந்திகிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கரூர் நகராட்கிக்கு உட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் குமார் ஸ்டோர் பின்புறம் உள்ள இரண்டாவது கிராஸ் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு காந்திகிராமம் பகுதியில் வீட்டுமனை பிரிப்பு செய்யப்பட்டது.
இதனால் அப்பகுதி பொமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிணறு அமைக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து நீர் எடுத்து அதன் அருகில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆபத்தான நிலையில்...
பின்னர் கடந்த 30 ஆண்டுகளில் அப்பகுதி விரிவடைந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வந்ததின் பேரில் ஏற்கனவே வினியோகிக்கப்பட்ட நீர் போதிய அளவில் இல்லாததாலும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதாலும் ஏற்கனே அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்படுத்த படாமல் அப்படியே போடப்பட்டது. இதனால் அந்த தொட்டியின் அடிப்பகுதி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த தொட்டி அருகே விநாயகர் கோவில் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள், பள்ளி குழந்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் எனவே உடனடியாக பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story