கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x
தினத்தந்தி 29 May 2021 11:56 PM IST (Updated: 29 May 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

கரூர்
கரூர் அருகே உள்ள சோமூரை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகள் கிருபாஸ்ரீ (வயது 18). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கல்லூரி அடைக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்த கிருபாஸ்ரீ சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கிருபாஸ்ரீயை அவரது பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து, மாயமான கல்லூரியை தேடி வருகிறார்.

Next Story