நாமக்கல் மாவட்டத்தில் புதிய உச்சம்: கொரோனாவுக்கு 13 பேர் சாவு; பலி எண்ணிக்கை 234 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்;
13 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும், நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 221 பேர் பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் வேதமகரிஷி நகர், அன்பு நகர், மங்களபுரம், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, பரமத்திவேலூர், தாஜ்நகர், மல்லசமுத்திரம், கூட்டப்பள்ளி, பொட்டணம், வளையப்பட்டி மற்றும் மோகனூர் அருகே உள்ள ராசி குமாரபாளையத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 7 பெண்கள் உள்பட 13 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகினர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 13 பேர் பலியாகி இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story