கொரோனாவுக்கு ஒரேநாளில் 9 பேர் பலி


கொரோனாவுக்கு ஒரேநாளில் 9 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2021 12:19 AM IST (Updated: 30 May 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 519 கொரோனா தொற்று உறுதியான நிலையில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 519 கொரோனா தொற்று உறுதியான நிலையில் 9 பேர் பலியாகி உள்ளனர். 
9 பேர் பலி 
மாவட்டத்தில் மேலும் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 36,400 ஆக உயர்ந்துள்ளது. 27,825 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 
8,187 பேர்அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நோய் பாதிப்புக்கு 9 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
 மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,083 படுக்கைகள் உள்ள நிலையில் 961 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 122 படுக்கைகள் காலியாக உள்ளன.
 சிகிச்சை மையங்களில் 1,558 படுக்கைகள் உள்ள நிலையில் 1,038 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 528 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு 
விருதுநகர் சூலக்கரை, சின்ன தாதம்பட்டி, போலீஸ் குடியிருப்பு, அரசு ஆஸ்பத்திரி, சிட்கோ தொழிற்பேட்டை, வேலுச்சாமி நகர், ஓடைப்பட்டி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், காந்தி நகர், வள்ளுவர் நகர், வீராசாமி தெரு, வெள்ளூர் பெருமான் கோவில் தெரு, ராமமூர்த்தி ரோடு, முத்துராமலிங்கநகர், என்.ஜி.ஓ. காலனி, புல்லலக் கோட்டை, அல்லம்பட்டி, லட்சுமி நகர், சூலக்கரை, காந்தி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும் கல்லூரணி,கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், சுந்தர நாச்சியார்புரம், புதுப்பட்டி, கிழவிகுளம், முத்தா நதி, தேவதானம், அயன் கொல்லங்கொண்டான்,  மம்சாபுரம், சேத்தூர், நத்தம்பட்டி, குன்னூர், வ.புதுப்பட்டி, நெடுங்குளம், சேது நாராயணபுரம், பாட்டகுளம், அரசபட்டி, கூமாபட்டி, சத்திரப்பட்டி, வன்னிமடை, இருக்கன்குடி, நீராவிப்பட்டி, சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, நரிக்குடி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 நேற்று மாவட்ட பட்டியலில் 287 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலப்பட்டியலில் 519 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story