மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு


மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 30 May 2021 12:28 AM IST (Updated: 30 May 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானார்.

பணகுடி:

பணகுடியை அடுத்த தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி இந்திரா (வயது 27). இவர் அந்த பகுதியில் தோட்ட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இந்திரா தெற்கு வள்ளியூரில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது தோட்டக்காரர் மோட்டார் அறையை சுத்தம் செய்யும்படி கூறினாராம். இதையடுத்து இந்திரா மோட்டார் அறைைய சுத்தம் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story