பாபநாசம் அணையில் இருந்து விவசாய பணிக்காக கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாபநாசம் அணையில் இருந்து விவசாய பணிக்காக கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சேரன்மாதேவி:
பாபநாசம் அணையில் இருந்து விவசாய பணிக்காக கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
13 ஆயிரம் ஏக்கர்
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் பெறும் கன்னடியன் கால்வாய் மூலம், கல்லிடைக்குறிச்சி முதல் கோபாலசமுத்திரம் வரை சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.
பாபநாசம் அணையில் இருந்து விவசாய பணிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 133.70 அடியாக இருந்தது. மொத்தம் 143 அடி உயரம் கொண்ட இந்த அணை நிரம்ப இன்னும் 9.30 அடியே பாக்கியாக உள்ளது.
தண்ணீர் திறக்கப்படுமா?
இதற்கிடையே, விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாக உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே விவசாய பணிகளை மேற்கொள்ள வசதியாக ஜூன் 1-ந்தேதி கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் இதே கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே கன்னடியன் கால்வாயின் குறுக்கே சிதலமடைந்த வாய்க்கால் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடுக்கி விடப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.
Related Tags :
Next Story