திருச்சி என்.ஐ.டி. சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி; கலெக்டர் எஸ்.சிவராசு நேரடி விசாரணை


திருச்சி என்.ஐ.டி. சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி; கலெக்டர் எஸ்.சிவராசு நேரடி விசாரணை
x
தினத்தந்தி 30 May 2021 1:00 AM IST (Updated: 30 May 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி என்.ஐ.டி. சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி ஒருவர் நேற்று இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கால் முறிந்தது.

திருச்சி,
திருச்சி என்.ஐ.டி. சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி ஒருவர் நேற்று இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கால் முறிந்தது.

தம்பதிக்கு கொரோனா

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவா் ஆரோக்கியராஜ் (வயது 41). இவரும், இவரது மனைவியும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் துவாக்குடி என்.ஐ.டி.யில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த 27-ந் தேதி மாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

2-வது மாடியில் இருந்து குதித்தார்

இந்த நிலையில் நேற்று இரவு 9.10 மணிக்கு, கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடி கட்டிடத்தில் இருந்து ஆரோக்கியராஜ் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால், அவருக்கு இடது தொடை எலும்பு முறிந்தது. மேலும் கீழ் தாடையும் உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இரவு 10 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குடும்பப்பிரச்சினை

மேலும் துவாக்குடி போலீசாரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளாக ஆரோக்கியராஜ் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்தான் கொரோனா அறிகுறியுடன் என்.ஐ.டி. சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குடும்ப பிரச்சினையும் இருந்து உள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் 2 வது மாடியில் இருந்து குதித்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story