ஒரே நாளில் 12,592 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 12,592 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 May 2021 1:07 AM IST (Updated: 30 May 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12,592 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12,592 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

18 வயது முதல் 44 வயது வரை

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்கு உட்பட்ட முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் நடந்து வருகிறது. திருச்சி அரசு ஆஸ்பத்திரி, மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் அமைத்து 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

12,592 பேருக்கு தடுப்பூசி

குறிப்பாக பால் வினியோகிப்பாளர்கள், தெரு காய்கறி வியாபாரிகள், ஆட்டோ, பஸ் ஓட்டுனர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசுத்துறையை சார்ந்தவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 12,320 செலுத்தி இருக்கிறார்கள்.  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 272 பேர், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். ஆக மொத்தம் 12,592 பேர் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 917 பேருக்கு செலுத்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story