மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு; மாட்டு வண்டிகள் பறிமுதல் + "||" + Case against 2 people who smuggled sand

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு; மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு; மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன். தனது உதவியாளருடன் கோடாலிகருப்பூர் கொள்ளிடக்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது 2 மாட்டு வண்டிகளில் அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. மணல் ஏற்றி வந்த 2 பேரிடம் விசாரிக்க முயன்றபோது, வண்டிகளில் இருந்து மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தா.பழூர் போலீசில் வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது, கோடாலிக்கருப்பூர் கடைத்தெருவை சேர்ந்த தவமணி மற்றும் சேகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மணல் கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தல்; 2 பேர் கைது
போலீசார் நேற்று முன்தினம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
2. மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறினார்.
3. மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
4. மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது
தா.பழூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு
மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது