மாவட்ட செய்திகள்

சேலத்தில்2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு + "||" + 2 breaking the lock of houses and stealing jewelery and money

சேலத்தில்2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சேலத்தில்2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சூரமங்கலம்:
சேலம் திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவருடைய மனைவி ரோசி (வயது 73). இவர்கள் 2 பேரும் தங்களது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. 
மேலும் இவர்களது வீட்டு மாடியில் திண்டுக்கல்லை சேர்ந்த சிவராஜ் (38) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார். அந்த வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இதே போல 2-வது மாடியில் குடியிருந்த குமரேசன் (35) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்து உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.