குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதி: பிரதமர் அறிவிப்புக்கு, எல்.முருகன் வரவேற்பு
குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதி: பிரதமர் அறிவிப்புக்கு, எல்.முருகன் வரவேற்பு.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எதிர்கால பாதுகாப்புக்கு உதவிட வைப்பு நிதியாக அவர்களது 23 வயதில் ரூபாய் 10 லட்சம் கிடைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இது தவிர மாதம் ரூபாய் 2000-ம் உதவித்தொகையும், கேந்திர வித்யாலயா பள்ளியில் இலவசமாக படிக்கும் வாய்ப்பும் வழங்குவது, ஆதரவற்ற நிலையில் உள்ள அந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பெரும் உதவியாகும். இந்த உதவி திட்டங்களை அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story