வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் தயாரிக்க முயன்ற சகோதரர்கள் கைது


வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் தயாரிக்க முயன்ற சகோதரர்கள் கைது
x
தினத்தந்தி 30 May 2021 10:38 AM IST (Updated: 30 May 2021 10:38 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் தயாரிக்க முயன்ற சகோதரர்கள் கைது.

பூந்தமல்லி,

கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சந்தையிலும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கு சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். சிலர் வீடுகளில் சாராயத்தை காய்ச்ச தொடங்கி உள்ளனர். இதையடுத்து குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் குடியிருப்பு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சகோதரர்களான விஜி (வயது 38) மற்றும் வினோத் (23) ஆகியோரின் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜி மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்தனர். அங்கு இருந்த 40 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

Next Story