மாவட்ட செய்திகள்

வல்லத்தில் வாலிபரை தாக்கிய டிரைவர் கைது + "||" + The driver who hit the wall in Vallam was arrested

வல்லத்தில் வாலிபரை தாக்கிய டிரைவர் கைது

வல்லத்தில் வாலிபரை தாக்கிய டிரைவர் கைது
வல்லத்தில் வாலிபரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வல்லம், 

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த திருஞானமூர்த்தி (வயது 38), திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு பகுதியை சேர்ந்த தினேஷ் (34), வல்லத்தை அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல். இவர்கள் 3 பேரும் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வல்லம்-ஆலக்குடி சாலை ஏகவுரியம்மன் கோவில் அருகே மண் எடுக்கும் இடத்தில் 3 பேரும் இருந்துள்ளனர். 

அப்போது சக்திவேல், திருஞானமூர்த்தியின் லாரியில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளார். இதனை திருஞானமூர்த்தி கண்டித்துள்ளார். அப்போது அருகில் இருந்த தினேஷ் திருஞானமூர்த்தியிடம் ஏன் தண்ணீருக்காக சண்டை போடுகிறாய் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த திருஞானமூர்த்தி தினேசை சாதி பெயரை சொல்லி திட்டி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை தாக்கினார். 

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் விசாரணை நடத்தினார். மேலும் திருஞானமூர்த்தியின் மீது ஜாதி பெயரை சொல்லி திட்டியது, கொலை முயற்சி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தவிட்டார். இதனையடுத்து வல்லம் போலீசார் திருஞானமூர்த்தியை கைது செய்தனர்.