ரெயிலில் கடத்திவந்த 417 பெங்களூருவில் இருந்து மது பாக்கெட்டுகள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த 417 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி தொழிலாளி உள்பட 2 பேரை கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை
மாநகராட்சி தொழிலாளி
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் இணைந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தபோது பயணிகள் இருக்கையில் 195 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்டிவட்டம் பகுதியை சேர்ந்த பாபு (வயது 45) என்பதும், பெங்களூரு மாநகராட்சியில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
அதேபோன்று மும்பையில் இருந்து புதுச்்சேரி செல்லும் தாதார் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விழுப்புரத்தை அடுத்த திருக்கோவிலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் ரஞ்சித்குமார் (22) என்பவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து 224 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரையும் கைது செய்தபோலீசார்,
அவரிடமிருந்து 224 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது பிளாட்பாரத்தில் கேட்பாரற்ற கிடந்த பையை சோதனை செதபோது அதில் 275 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தது.அதையும் போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story