கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் நரிக்குறவர்கள்


கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் நரிக்குறவர்கள்
x
தினத்தந்தி 30 May 2021 11:33 AM GMT (Updated: 30 May 2021 11:33 AM GMT)

கொரோனா ஊரடங்கால் திருக்கடையூர் பகுதியில் நரிக்குறவா்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கிறார்கள்.

திருக்கடையூர், 

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மேலும் இங்கு மட்டுமே தினமும் ஆயுட்ஹோமம், மணிவிழா, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடை பெறுவதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வர்.

திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தினசரி தொழிலாள ஊசி, பாசி, மணி என பல வண்ண மாலைகள், வளையல்கள், பலூன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு உத்தரவுபடி அனைத்து மத வழிபாட்டு தளங்களும் சுற்றுலா தளங்களும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பி அங்கு வியாபாரம் செய்து வந்த நரிக்குறவர்கள் ஊசி, பாசி பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அந்த பகுதி நரிக்குறவ மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story