கம்பம் நகராட்சியில், இன்று ஆட்டோ டிரைவர்களுக்கு தடுப்பூசி முகாம்
கம்பம் நகராட்சியில் ஆட்டோ டிரைவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் இன்று நடக்கிறது.
கம்பம்:
கம்பம் அரசு மருத்துவமனை மற்றும் நகர ஆரம்பசுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொதுமக்களுடன் தொடர்பில் உள்ள முன்கள பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள், லாரி டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கம்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தடுப்பூசி போட வருபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை எடுத்து வரவேண்டும் என நகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story