சுவையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலையில் வாசனை மற்றும் சுவையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலையில் வாசனை மற்றும் சுவையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதிலும் குறிப்பாக கடந்த வாரம் தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பலனாக தமிழகத்தின் மொத்த பாதிப்பு கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதிலும் ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது அதிகபட்ச பாதிப்பாக மாவட்டத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக திருப்பூரில் பாதிப்பு 1800க்கும் குறைவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
வாசனை-சுவை
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுபோல் பலி எண்ணிக்கையும் மாவட்டத்தில் 500ஐயும் நெருங்கி வருகிறது. இதற்கிடையே மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கொரோனா 2-வது அலையில் பலருக்கு வாசனை மற்றும் சுவை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த அறிகுறியுடன் பலர் இருந்து வருகிறார்கள்.
கொரோனா அறிகுறி என்பதால் இவ்வாறு பாதிக்கப்படுகிறவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். மருத்துவர்களும் இதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த வாசனை மற்றும் சுவை இழப்பை விரைவாக திரும்ப பெறலாம் என சித்தா டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓம பொட்டலம்
இது குறித்து சித்தா டாக்டர்கள் கூறியதாவது
கொரோனா 2வது அலை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் வாசனை மற்றும் சுவை இழந்தவர்களுக்கு இந்த சுவை மற்றும் வாசனையை திரும்ப பெற ஓம பொட்டலம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையில் விரைவாக இந்த அறிகுறிகளுடன் இருக்கிறவர்களுக்கு சுவை மற்றும் வாசனை திரும்ப வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் இதனை பொதுமக்கள் வீடுகளிலும் தயாரிக்கலாம்.
அதாவது ஓமம் மற்றும் கிராம்பு சிறிதளவு எடுத்து, அதனை நன்றாக பொடியாக்க வேண்டும். தொடர்ந்து அதில் வெற்றிலை சாறு மற்றும் பச்சை கற்பூரம் போன்றவற்றை சேர்த்து ஒரு சிறிய துணியில் முடிச்சு போட்டு கட்ட வேண்டும். தொடர்ந்து இந்த ஓம பொட்டலத்தை மூக்கின் இருபுறமும் வைத்து நன்றாக இழுக்க வேண்டும். இவ்வாறு சில நாட்கள் செய்தால் போதும், விரைவாக வாசனை மற்றும் சுவை இழந்தவர்களுக்கு சரியாகிவிடும். சில நாட்களிலேயே வாசனை மற்றும் சுவையும் திரும்ப கிடைத்து விடும். இதனால் இந்த அறிகுறி இருக்கிறவர்கள் வீடுகளிலேயே இதனை தயாரித்து பயன்படுத்தலாம். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள சித்தா மருத்துவர்களிடமும் இதுகுறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story