மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்மது விற்ற வாலிபர் கைது + "||" + in thtoothukudi, younger arrested for selling liquor

தூத்துக்குடியில்மது விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில்மது விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடியில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா என்று மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக டேனியல் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.