மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சபஇன்ஸ்பெக்டர் பலி + "||" + in thoothukudi, police subinspector killed in motor cycle accident

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சபஇன்ஸ்பெக்டர் பலி

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சபஇன்ஸ்பெக்டர் பலி
தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சபஇன்ஸ்பெக்டர் பலியானார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 54). முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர், தற்போது, அயல்பணியாக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் உள்ள மத்திய பாகம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 22-ந் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
சாவு
இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.