உடன்குடியில் ரூ.2.30 லட்சம் புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது


உடன்குடியில் ரூ.2.30 லட்சம் புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது
x
தினத்தந்தி 30 May 2021 9:44 PM IST (Updated: 30 May 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் ரூ.2.30 லட்சம் புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் ரூ2.30 லட்சம் மதிப்பிலான புகையிலை, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தனிப்படை ரோந்து
 உடன்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் புகையிலை, குட்கா, கஞ்சா, வெளிமாநில மதுபாட்டில்கள் என போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ஆலோசனையின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போலீசார் ஹரிதாஸ், ஆனந்த், சுந்தர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
புகையிலை பொருட்கள் சிக்கியது
இந்நிலையில் உடன்குடி பண்டாரஞ்செட்விளை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது மோட்டார் சைக்கிளில் ஒருவர் சாக்கு மூட்டையுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் சாக்கு மூட்டையை சோதனையிட்ட போது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வியாபாரி கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த அழகுவேல் என்ற வியாபாரி என  தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசார், மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2.30லட்சம் மதிப்பிலான 263கிலோ புகையிலை, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story