திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மத்திய சிறை‌ காவலர் பலி


திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மத்திய சிறை‌ காவலர் பலி
x
தினத்தந்தி 30 May 2021 9:44 PM IST (Updated: 30 May 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மத்திய சிறை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கொள்ளிடம் டோல்கேட், 
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மத்திய சிறை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மத்திய சிறை காவலர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கோவாண்டகுறிச்சி உடையார்தெருவைச் சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் இளையராஜா (வயது 28). இவர் திருச்சி மத்திய சிறையில் காவலராக வேைல பார்த்து வந்தார். 
இ்ந்தநிலையில் நேற்று பணி முடிந்து இளையராஜா தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஒய் ரோடு பகுதியில் காலை 11.45 மணி அளவில் வந்து கொண்டிருந்தார்.
லாரி மோதி சாவு
அப்போது, சென்னையில் இருந்து டால்மியாபுரம் நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அவா் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் குப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வராஜை (39) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story