வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சிறப்பு முகாம்கள்.கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சிறப்பு முகாம்கள்.கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 May 2021 9:57 PM IST (Updated: 30 May 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சிறப்பு முகாம்கள்.கலெக்டர் தகவல்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவாக்சின் முதல் டோஸ் செலுத்தி 4 வாரங்கள் நிறைவடைந்த நபர்களுக்கு 2-வது டோஸ் செலுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வேலூர் காந்திரோட்டில் உள்ள அரிஹந்த் மைதானம், ஊரீசு கல்லூரி வளாகம், காட்பாடி காந்திநகரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம், குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள சமுதாயகூடம், பேரணாம்பட்டு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் இன்று  (திங்கட்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
 
இந்த முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டும் கோவிஷீல்டு முதலாவது டோஸ் போடப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி இலவசமாக போட்டு கொள்ளலாம். 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Next Story