மணல் கடத்தியவர் கைது


மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 9:58 PM IST (Updated: 30 May 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கமுதி, மே.31-
கமுதி அருகே ஒச்சதேவன்கோட்டையை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது41).  இவர் டிராக்டரில், அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரன் (21). என்பவரை காணிக்கூர் ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா தலைமையில் போலீசார் தகவல் அறிந்து ரோந்து பணியில் சென்றபோது மணலுடன் தப்பிச்சென்றனர். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா மற்றும் அவரது டிரைவர் குணசேகரன் ஆகியோர் டிராக்டரை விரட்டி சென்றனர். அப்போது டிராக்டரில் உள்ள ஆற்று மணலை கொட்டியவாறு டிராக்டர் டிரைவர் வயல் வெளியில் புகுந்து டிராக்டரை ஓட்டிச் சென்றார். இதையடுத்து தொடர்ந்து விரட்டிச்சென்ற போலீசார் டிரைவர் முனீஸ்வரனை ஆற்று மணலுடன் கையும் களவுமாக பிடித்தனர். டிராக்டர் உரிமையாளர் தப்பிச் சென்றுவிட்டார். கோவிலாங்குளம் போலீசார் வக்குப்பதிவு செய்து டிரைவர் முனீஸ்வரனை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Next Story