மாவட்ட செய்திகள்

மதுவிற்றவர்கள் கைது + "||" + Police arrested the liquor sellers.

மதுவிற்றவர்கள் கைது

மதுவிற்றவர்கள் கைது
மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

சோமரசம்பேட்டை, 
சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது நாடார் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 49) சட்டவிரோதமாக மதுவிற்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் மணப்பாறை அருகே குப்பனார்பட்டியில் சட்டவிரோதமாக மதுவிற்றதாக அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (49), முருகேசன் (34) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.