சாராயம் காய்ச்சிய, ஊறல் போட்டவர்கள் கைது
சாராயம் காய்ச்சிய, ஊறல் போட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் அருகே சாராயம் காய்ச்ச படுவதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் ஏட்டு மகேஷ்குமார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பூனாம்பாளையம் அடுத்துள்ள கட்டால் என்ற பகுதியில் வீட்டின் பின்புறம் 2 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த பாலகிருஷ்ணன் (வயது 48), சங்கர் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், அடுப்பு, கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியில் பழச்சாற்றின் மூலம் சாராய ஊறல் போட்ட மாரியப்பன்(42), சித்தநத்தம் பகுதியில் கோபிநாதன்(32) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் காட்டுப்புத்தூர் அருகே உள்ள பிடாரமங்கலத்தில் சாராயம் விற்றதாக காலனி தெருவை சேர்ந்த ஆனந்த்(32), நல்லுசாமி(36 ஆகியோரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story