மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கை மீறிய 3 இறைச்சி கடைகள் மூடல் + "||" + Closure of 3 butcher shops in violation of full curfew

முழு ஊரடங்கை மீறிய 3 இறைச்சி கடைகள் மூடல்

முழு ஊரடங்கை மீறிய 3 இறைச்சி கடைகள் மூடல்
ஊட்டியில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இறைச்சி கடையை மூடி நகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே ஊட்டியில் உள்ள காந்தல் பகுதியில் கோழி இறைச்சி கடை திறந்து செயல்படுவதாக நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு புகார் வந்தது. 

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ரூ.1,000 அபராதம் விதித்து கடையை மூடி நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சனக்கொரை, முள்ளிக்கொரை ஆகிய 2 இடங்களில் கோழி இறைச்சி கடைகள் திறந்து செயல்பட்டதை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி சோதனையின்போது கண்டறிந்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

மேலும் முழு ஊரடங்கின் போது இறைச்சி கடைகளை திறக்க கூடாது. பொதுமக்கள் கூட்டம் கூடினால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து 2 கடைகளை மூடி சாவிகள் பெறப்பட்டன.