பந்தலூர் அருகே ஆதிவாசி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
பந்தலூர் அருகே ஆதிவாசி மக்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே கிளன்ராக் ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு 15 ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு சரிவர வாகன போக்குவரத்து வசதி இ்ல்லை. இதனால் அத்தியாவசிய தேவைக்காக பந்தலூருக்கு நடந்து சென்று வர வேண்டி உள்ளது.
தற்போது முழு ஊரடங்கால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கிளன்ராக் ஆதிவாசி காலனியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
அதன்படி தாசில்தார் தினேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பொதிகைநாதன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
Related Tags :
Next Story