கடமலை-மயிலை ஒன்றியத்தில் முந்திரி விலை வீழ்ச்சி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் முந்திரி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொட்டை முந்திரியின் உற்பத்தி அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதன்காரணமாக மரங்களில் உள்ள கொட்டை முந்திரியில் கருப்பு நிறத்தில் புள்ளிகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையான கொட்டை முந்திரி தற்போது கிலோ ரூ.60 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இருப்பினும் உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு வந்து விவசாயிகளிடம் இருந்து கொட்டை முந்திரிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வது வழக்கம். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகளால் வரமுடியவில்லை. இதுவும் கொட்டை முந்திரி விலை குறைவிற்கு காரணம் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story